/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ஏலச்சீட்டு மோசடி செய்தோர் மீது நடவடிக்கை வேண்டும் பாதிக்கப்பட்ட பெண்கள் கலெக்டரிடம் முறையீடுஏலச்சீட்டு மோசடி செய்தோர் மீது நடவடிக்கை வேண்டும் பாதிக்கப்பட்ட பெண்கள் கலெக்டரிடம் முறையீடு
ஏலச்சீட்டு மோசடி செய்தோர் மீது நடவடிக்கை வேண்டும் பாதிக்கப்பட்ட பெண்கள் கலெக்டரிடம் முறையீடு
ஏலச்சீட்டு மோசடி செய்தோர் மீது நடவடிக்கை வேண்டும் பாதிக்கப்பட்ட பெண்கள் கலெக்டரிடம் முறையீடு
ஏலச்சீட்டு மோசடி செய்தோர் மீது நடவடிக்கை வேண்டும் பாதிக்கப்பட்ட பெண்கள் கலெக்டரிடம் முறையீடு
ADDED : பிப் 06, 2024 04:11 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாக கூட்டரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது. இதில், மாவட்டத்தில் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 510 பேர் மனு அளித்திருந்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
ஏரி மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து சண்முகம் என்பவர் அளித்த மனு:
வாலாஜாபாத் தாலுகாவிற்குட்பட்ட, காவாந்தண்டலம் கிராமத்தில் உள்ள ஆயக்கட்டுதாரர்கள், காவாந்தண்டலம் ஏரியின் தண்ணீர் மூலம் விவசாயம் செய்கின்றனர். இந்நிலையில், இந்த ஏரியில் தனியார் நிறுவனம் மணல் எடுக்க போவதாக கிராம நிர்வாக அலுவலரின் அறிவிப்பு வாயிலாக தெரிந்து கொண்டோம்.
அவ்வாறு, மணல் எடுக்கும் முடிவை கைவிட வேண்டும். எங்கள் விவசாயம் பாதிப்புக்குள்ளாகும். ஏரிக்கரையை நீர்வள ஆதாரத்துறை சீரமைக்க வேண்டும்.
செவிலிமேடு ராஜி என்பவர் அளித்த மனு:
காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் உள்ளது. கோவில் இடத்தின் மதில் சுவரை அருகில் வசிக்கும் பவானி, அவரது மகன் உள்ளிட்ட நான்கு பேர் இடித்துவிட்டனர். இதுதொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், அடுத்தபடியான சட்ட நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.
நாங்கள் மதில் சுவரை மீண்டும் கட்டுவதற்கு உரிய பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெங்காடு வார்டு உறுப்பினர் முருகன் என்பவர் அளித்த மனு:
ஸ்ரீபெரும்புதுார் வட்டாரத்துக்குட்பட்ட வெங்காடு ஊராட்சியில், தலைவியின் கணவர், துணை தலைவியின் கணவர், ஊராட்சி செயலர் உள்ளிட்டோர் இணைந்து நிர்வாக சீர்கேடு ஏற்படுத்துகின்றனர். ஊராட்சி நிதியிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.
கிராம சபை தீர்மானங்களும் முறையாக நிறைவேறுவதில்லை. ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏலச்சீட்டு மோசடி செய்தோர் மீது நடவடிக்கை எடுக்க பெண்கள் மனு:
ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவிற்குட்பட்ட, இருங்காட்டுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவரின் மனைவியும், அவரது மகள் மோனிகா ஆகியோர், பண்டு சீட்டு, ஏலச்சீட்டு ஆகியவை 15 ஆண்டுகளாக நடத்தி வந்தனர்.
எங்கள் பகுதியில், ௧௦௦க்கும் மேற்பட்ட பெண்கள் இவர்களை நம்பி, ௧ லட்சம், 2 லட்சம், 5 லட்சம் என, 20 மாத சீட்டுகள் கட்டி வந்தோம்.
ஆனால், சீட்டு கட்டியபல பெண்களுக்கு சீட்டு பணம் வழங்காமல் அலைக்கழித்து வருகின்றனர். ஏற்கனவே மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளோம்.
எங்களுடைய சீட்டு பணத்தை அவர்களிடம் இருந்து பெற்றுத்தர, மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.