/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வாலாஜாபாதில் செயல்படாத சிக்னல்கள் நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகனங்கள் வாலாஜாபாதில் செயல்படாத சிக்னல்கள் நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகனங்கள்
வாலாஜாபாதில் செயல்படாத சிக்னல்கள் நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகனங்கள்
வாலாஜாபாதில் செயல்படாத சிக்னல்கள் நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகனங்கள்
வாலாஜாபாதில் செயல்படாத சிக்னல்கள் நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகனங்கள்
ADDED : மே 30, 2025 10:42 PM

வாலாஜாபாத்:வாலாஜாபாதில் லாரி, வேன், கார், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் என தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இரவு, பகலாக அனைத்து சாலைகளிலும் அணிவகுத்து செல்கின்றன.
வாலாஜாபாத் ரவுண்டனா சாலை பகுதியில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் ஆகிய முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எனினும், அந்த சிக்னல்கள் முறையாக செயல்படுத்தப்படாமல், வெறும் காட்சி பொருளாகவே இருக்கின்றன.
இதனால், வாலாஜாபாத் சாலை பகுதிகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், போக்குவரத்து நெரிசலில் சிக்கி தினமும் அவதிப்படுகின்றனர். வரும் ஜூன் 2ல் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், போக்குவரத்து பிரச்னை மேலும் அதிகரிக்கும்.
எனவே, வாலாஜாபாத் சாலையின் முக்கிய சந்திப்புகளில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னல்களை முறையாக செயல்படுத்த, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள், பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.