/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மாட வீதியில் நிற்கும் வாகனங்களால் போக்குவரத்திற்கு இடையூறு மாட வீதியில் நிற்கும் வாகனங்களால் போக்குவரத்திற்கு இடையூறு
மாட வீதியில் நிற்கும் வாகனங்களால் போக்குவரத்திற்கு இடையூறு
மாட வீதியில் நிற்கும் வாகனங்களால் போக்குவரத்திற்கு இடையூறு
மாட வீதியில் நிற்கும் வாகனங்களால் போக்குவரத்திற்கு இடையூறு
ADDED : ஜூன் 08, 2025 12:52 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், விடுமுறை நாளான நேற்று, வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் தங்களது வாகனங்களை செங்கல்பட்டு சாலையான, வடக்கு மாட வீதியில், சாலையின் இரு ஓரங்களிலும் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்திவிட்டு சென்றனர்.
இதனால், வடக்கு மாட வீதி வழியாக, வாலாஜாபாத், செங்கல்பட்டு, தாம்பரம், மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிக்கு சென்ற வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.
விடுமுறை, முகூர்த்தம், உள்ளிட்ட விசேஷ நாட்களில் வடக்கு மாட வீதியில் சாலையின் இருபுறமும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.
எனவே, நெரிசலை தவிர்க்க, வடக்கு மாட வீதியில், போக்குவரத்திற்கு இடையூறாக சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்த போலீசார் தடை விதிக்க வேண்டும், தடையை மீறி நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.