/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வர்ணம் பூசப்படாத வேகத்தடை விபத்தில் சிக்கும் வாகனங்கள் வர்ணம் பூசப்படாத வேகத்தடை விபத்தில் சிக்கும் வாகனங்கள்
வர்ணம் பூசப்படாத வேகத்தடை விபத்தில் சிக்கும் வாகனங்கள்
வர்ணம் பூசப்படாத வேகத்தடை விபத்தில் சிக்கும் வாகனங்கள்
வர்ணம் பூசப்படாத வேகத்தடை விபத்தில் சிக்கும் வாகனங்கள்
ADDED : ஜூலை 02, 2025 12:55 AM

புத்தேரி:மேட்டு நகர் சாலையில் உள்ள வேகத்தடைகளுக்கு வெள்ளை வர்ணம் பூசப்படாததால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
காஞ்சிபுரம் சர்வதீர்த்தம் - முசரவாக்கம் சாலை வழியாக பாக்குபேட்டை, மேட்டு நகர், சிறுகாவேரிபாக்கம், கீழ்கதிர்பூர், கீழம்பி உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் செல்கின்றனர்.
வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், புத்தேரி ஊராட்சி, மேட்டு நகர் அரசு துவக்கப்பள்ளி அருகில், விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் சிக்குவதை தவிக்க மூன்று இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.
வேகத்தடைக்கு வெள்ளை வர்ணம் பூசப்படாததாலும், வேகத்தடையின் மீது, இரவில் ஒளி பிரதிபலிப்பான் ஒட்டப்படாமல் உள்ளதாலும், வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
குறிப்பாக, இரவு நேரத்தில் இச்சாலையில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள், வேகத்தடையை கவனிக்காமல் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குவதாக கிராமத்தினர் தெரிவிக்கின்றனர்.
எனவே, வேகத்தடைக்கு வெள்ளை நிற வர்ணம் பூசுவதோடு, இரவில் ஒளிரும் வகையில், ஒளி பிரதிபலிப்பான் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்திஉள்ளனர்.