/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ உத்திரமேரூர் - வாலாஜாபாத் மினி பஸ் ஜூன் 15ல் சேவை துவக்கம் உத்திரமேரூர் - வாலாஜாபாத் மினி பஸ் ஜூன் 15ல் சேவை துவக்கம்
உத்திரமேரூர் - வாலாஜாபாத் மினி பஸ் ஜூன் 15ல் சேவை துவக்கம்
உத்திரமேரூர் - வாலாஜாபாத் மினி பஸ் ஜூன் 15ல் சேவை துவக்கம்
உத்திரமேரூர் - வாலாஜாபாத் மினி பஸ் ஜூன் 15ல் சேவை துவக்கம்
ADDED : மே 11, 2025 09:18 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் இருந்து, திருப்புலிவனம், வெங்கச்சேரி, நெய்யாடுபாக்கம் வழியாக, வாலாஜாபாத் பகுதிக்கு பேருந்து வசதி இல்லை.
இதனால், செய்யாற்று கரையோரம் இருக்கும் வயலக்காவூர், நெய்யாடுபாக்கம், காவாம்பயிர் மற்றும் வாலாஜாபாத் பகுதிக்கு செல்ல சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது என, பல்வேறு கிராமத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதை ஏற்று, உத்திரமேரூரில் இருந்து, திருப்புலிவனம், வெங்கச்சேரி கிராமம் வழியாக வாலாஜாபாதிற்கு மினி பேருந்து சேவையை ஜூன் மாதம் 15ம் தேதி முதல் துவக்கப்பட உள்ளது என, மினி பேருந்து சங்கத்தினர் தெரிவித்தனர்.