/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ புத்தேரியில் சாலை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல் புத்தேரியில் சாலை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
புத்தேரியில் சாலை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
புத்தேரியில் சாலை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
புத்தேரியில் சாலை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
ADDED : மார் 21, 2025 12:51 AM

புத்தேரி:காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி ஊராட்சிக்கு செல்லும் பிரதான சாலையான, கைலாசநாதர் மேட்டு தெருவில் இருந்து, பெரிய மேட்டுத் தெரு உள்ள சாலை 3 கி.மீ., நீளமுடையது. இச்சாலை வழியாக சாலபோகம், பிள்ளையார்பாளையம், பாக்குபேட்டை, கீழ்கதிர்பூர், விஷார், மேல்கதிர்பூர், விப்பேடு உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இச்சாலை ஆங்காங்கே ஜல்லி கற்கள் பெயர்ந்து சேதமடைந்து, மழைக்காலத்தில் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது.
எனவே, இச்சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை சார்பில், சேதமடைந்த சாலையை ‛பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கடந்த மாதம், சாலை சேதமடைந்த பகுதியில், ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு பரப்பி விடப்பட்டுள்ளது. அடுத்த கட்ட பணியை துவக்காமல் சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால், ஜல்லி கற்களின் மீது செல்லும் இருசக்கர வாகனங்கள் பழுதாகின்றன. காலணி அணியாமல் செல்வோர் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஜல்லி கற்களில் இருந்து பறக்கும் புழுதியால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் துாசு படிமம்போல படிகிறது.
எனவே, புத்தேரி ஊராட்சியில், ‛பேட்ச் ஒர்க்' சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.