/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பயணியர் நிழற்குடையை சீரமைக்க வலியுறுத்தல் பயணியர் நிழற்குடையை சீரமைக்க வலியுறுத்தல்
பயணியர் நிழற்குடையை சீரமைக்க வலியுறுத்தல்
பயணியர் நிழற்குடையை சீரமைக்க வலியுறுத்தல்
பயணியர் நிழற்குடையை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : மார் 21, 2025 12:48 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், அகரம் தூளி கிராமத்தில், 25 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடையை பயன்படுத்தி, அப்பகுதியைச் சேர்ந்தோர் பேருந்து வாயிலாக, உத்திரமேரூர், வந்தவாசி, மதுராந்தகம் ஆகிய பகுதிகளுக்கு தினமும் சென்று வந்தனர்.
தற்போது, பயணியர் நிழற்குடை முறையான பராமரிப்பு இல்லாமலும், சேதமடைந்தும, தென்னங்கீற்று வைக்கும் இடமாகவும் உள்ளது.
சேதமடைந்த பயணியர் நிழற்குடை எந்நேரத்திலும் இடிந்து விழும் என்பதால், பயணியர் அதை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர்.
மேலும், அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் அவ்வப்போது, பயணியர் நிழற்குடையில் விளையாடி வருகின்றனர்.
எனவே, சேதமடைந்த பயணியர் நிழற்குடையை அகற்ற, அப்பகுதியைச் சேர்ந்தோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.