/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/கழிவுநீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்கழிவுநீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
கழிவுநீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
கழிவுநீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
கழிவுநீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 22, 2025 01:24 AM

காஞ்சிபுரம்:கருப்படிதட்டடை ஊராட்சி, காந்தி நகர் முதல் தெருவில், பாதியில் விடப்பட்ட கழிவுநீர் கால்வாய் கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் ஒன்றியம், கருப்படிதட்டடை ஊராட்சி, காந்தி நகர், முதல் தெருவில் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில், 10 மாதங்களுக்கு முன், ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை சார்பில், கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால், தெரு முழுதும் கால்வாய் அமைக்காமல் கட்டுமானப் பணி பாதியில் விடப்பட்டுள்ளது.
இதனால், கால்வாய் இல்லாத பகுதியில் வசிப்போர், தங்களது வீட்டு உபயோக கழிவுநீரை கால்வாயில் விடமுடியாத சூழல் உள்ளது. எனவே, பாதியில் விடுபட்ட கழிவுநீர் கால்வாய் கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க கருப்படிதட்டடை ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காந்தி நகர், முதல் தெருவினர் வலியுறுத்தி உள்ளனர்.