/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தடுப்பு இல்லாத சிறுபாலத்தால் கடல்மங்கலத்தில் விபத்து அபாயம் தடுப்பு இல்லாத சிறுபாலத்தால் கடல்மங்கலத்தில் விபத்து அபாயம்
தடுப்பு இல்லாத சிறுபாலத்தால் கடல்மங்கலத்தில் விபத்து அபாயம்
தடுப்பு இல்லாத சிறுபாலத்தால் கடல்மங்கலத்தில் விபத்து அபாயம்
தடுப்பு இல்லாத சிறுபாலத்தால் கடல்மங்கலத்தில் விபத்து அபாயம்
ADDED : ஜூன் 15, 2025 12:51 AM

உத்திரமேரூர்:கடல்மங்கலம் சாலையில் உள்ள சிறுபாலத்தில் தடுப்புகள் இல்லாததால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் கிராமத்தில் இருந்து, திருப்புலிவனம் செல்லும் சாலையில் இருந்து பிரிந்து, கடல்மங்கலம் சாலை செல்கிறது. இச்சாலையின் குறுக்கே செல்லும் நீர்வரத்து கால்வாய் மீது, சிறுபாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்த சிறுபாலத்தின் வழியே, தினமும் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன. 25 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட, இந்த சிறுபாலத்தின் இருபுறமும் தடுப்புகள் இல்லாமல் உள்ளது.
இதனால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் நிலைத்தடுமாறி, 10 அடி ஆழமுள்ள கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது.
மேலும், சிறுபாலம் அமைந்துள்ள பகுதியில் மின் விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சிறுபாலத்தில் தடுப்புகள் அமைக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.