/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தார்ப்பாய் மூடாமல் செல்லும் மண் லாரிகளால் அவதி தார்ப்பாய் மூடாமல் செல்லும் மண் லாரிகளால் அவதி
தார்ப்பாய் மூடாமல் செல்லும் மண் லாரிகளால் அவதி
தார்ப்பாய் மூடாமல் செல்லும் மண் லாரிகளால் அவதி
தார்ப்பாய் மூடாமல் செல்லும் மண் லாரிகளால் அவதி
ADDED : செப் 13, 2025 12:29 AM

வாலாஜாபாத்:ஆண்டிசிறுவள்ளூரில் இயங்கும் தனியார் கல் குவாரி லாரிகளில் தார்ப்பாய் மூடாமல் செல்வதால், சாலையில் மண் சிதறி, வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
வாலாஜாபாத் ஒன்றியம், ஆண்டிசிறுவள்ளூர் ஏரியில், மாவட்ட நிர்வாகம் அனுமதியின்படி, கடந்த மாதம் மண் குவாரி துவங்கப்பட்டது.
இந்த மண் குவாரியில் இருந்து எடுக்கப்படும் மண், டாரஸ் லாரிகள் மூலம் காரை மற்றும் பொன்னேரிக்கரை வழியாக காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு எடுத்து செல்லப்படுகின்றன.
இதில், சில லாரிகள் தவிர்த்து பெரும்பாலான லாரிகளில் தார்ப்பாய் போர்த்தாமலும், அதிகளவு பாரம் ஏற்றியும் செல்கின்றன.
இதனால், லாரியில் இருந்து மண் விழுந்து, சாலையோரம் குவிந்து கிடக்கிறது. அவ்வழியே வாகனங்கள் செல்லும்போது புழுதி பரவி, பிற வாகன ஓட்டிகளின் கண்களை பதம்பார்ப்பதோடு, பாதசாரிகளும் அவதிப் படுகின்றனர்.
எனவே, ஆண்டிசிறுவள்ளூர் மண் குவாரியில் இருந்து மண் ஏற்றிச்செல்லும் லாரிகளில், தார்ப்பாய் போர்த்தி இயக்க சம்பந்தப் பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.