ADDED : மார் 23, 2025 08:00 PM
கீழ்கதிர்பூர்:கீழ்கதிர்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், உலக தண்ணீர் தினத்தையொட்டி, மரக்கன்று நடும் விழா, பள்ளி தலைமையாசிரியர் பழமலைநாதன் தலைமையில் நடந்தது.
இதில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஆசிரிய பயிற்சி நிறுவன முதல்வர் தமிழ்செல்வி, காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர் பியூலா ஆகியோர், வழிகாட்டுதலின் ஒவ்வொரு மாணவ- - மாணவியரும் மூன்று மரக்கன்று நடவு செய்து, அம்மரங்களுக்கு பெயர் சூட்டி பாதுகாக்க கேட்டுக் கொண்டனர்.
அதன்படி, பசுமை இந்தியா தன்னார்வ அமைப்பு நிறுவனர் பசுமை மேகநாதன், மாணவ- - மாணவியருடன் இணைந்து, செண்பகம், பூந்திகொட்டை, மகிழம், பலா, இலுப்பை, பூவரசு, புன்னை, புங்கன் என, நாட்டு வகையைச் சேர்ந்த 30 மரக்கன்றுகளை பள்ளி வளாகத்தில் நட்டனர்.