/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/தாய் சித்ரவதை செய்த குழந்தைக்கு சிகிச்சைதாய் சித்ரவதை செய்த குழந்தைக்கு சிகிச்சை
தாய் சித்ரவதை செய்த குழந்தைக்கு சிகிச்சை
தாய் சித்ரவதை செய்த குழந்தைக்கு சிகிச்சை
தாய் சித்ரவதை செய்த குழந்தைக்கு சிகிச்சை
ADDED : பிப் 23, 2024 11:48 PM
பெரும்பாக்கம்:மேடவாக்கம் அடுத்த, பெரும்பாக்கம் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஸ்ரீதேவி- --கனகராஜ் தம்பதிக்கு இருகுழந்தைகள் உள்ளன. கணவர் கனகராஜ், பணிக்காக வெளிநாட்டு சென்றுள்ளார்.
நேற்று முன்தினம், 2 வயது மகன் தர்ஷன் கீழே விழுந்ததில், தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறி, பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ததுள்ளார். மருத்துவமனையில் குழந்தை தர்ஷனை பார்த்துக்கொள்ள, செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்ற பணிப்பெண்ணை நியமித்துள்ளார்.
குழந்தை தர்ஷன் உடல் முழுதும் காயங்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பணிப்பெண், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விசாரணையில், தாய் ஸ்ரீதேவி, குழந்தை தர்ஷனின் உடலில் சூடு வைத்தும், கடித்தும், கிள்ளியும், சுடு நீர் ஊற்றியும் கொடுமைப்படுத்தியது தெரிய வந்தது.
தொடர்ந்து குழந்தைகள் நல பாதுகாப்பு குழும அதிகாரிகள், ஸ்ரீதேவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.