/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/வீட்டின் பூட்டை உடைத்து திருடிய மூன்று பேர் கைதுவீட்டின் பூட்டை உடைத்து திருடிய மூன்று பேர் கைது
வீட்டின் பூட்டை உடைத்து திருடிய மூன்று பேர் கைது
வீட்டின் பூட்டை உடைத்து திருடிய மூன்று பேர் கைது
வீட்டின் பூட்டை உடைத்து திருடிய மூன்று பேர் கைது
ADDED : ஜூன் 10, 2025 10:30 PM
ஸ்ரீபெரும்புதுார்:சுங்குவார்சத்திரம் அருகே, சோகண்டி சுவாதி நகரைச் சேர்ந்தவர் ரகுபதி, 35; மதுரமங்கலம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை செய்து வருகிறார்.
கடந்த 31ம் தேதி மாலை, ரகுபதி. மனைவி மற்றும் குழந்தைகளுடன் சுங்குவார்சத்திரம் சென்று விட்டு, சிறிது நேரத்திற்கு பின் வீட்டிற்கு திரும்பினர்.
அந்த நேரத்தில், மர்ம நபர்கள் மூன்று பேர், ரகுபதியின் வீட்டின் பூட்டை உடைத்துக் கொண்டிருந்தனர். இதையடுத்து, வீட்டின் உரிமையாளர்களை கண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பினர்.
இது குறித்து ரகுபதி, சுங்குவார்சத்திர் போலீசில் புகார் அளித்தர். அதன்படி, வழக்கு பதிந்து, விசாரணை நடத்திய போலீசார், மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த ஹரிசுதன், 22, திருமழிசை வில்சன், 20, குண்டுமேடு ரமேஷ், 20, ஆகிய மூன்று பேரை, நேற்று கைது செய்தனர்.