/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/பேருந்து நிறுத்தம் இடம் மாற்றி கட்டுவதாக புகார் திருமுக்கூடல் கிராமத்தினர் கலெக்டரிடம் மனுபேருந்து நிறுத்தம் இடம் மாற்றி கட்டுவதாக புகார் திருமுக்கூடல் கிராமத்தினர் கலெக்டரிடம் மனு
பேருந்து நிறுத்தம் இடம் மாற்றி கட்டுவதாக புகார் திருமுக்கூடல் கிராமத்தினர் கலெக்டரிடம் மனு
பேருந்து நிறுத்தம் இடம் மாற்றி கட்டுவதாக புகார் திருமுக்கூடல் கிராமத்தினர் கலெக்டரிடம் மனு
பேருந்து நிறுத்தம் இடம் மாற்றி கட்டுவதாக புகார் திருமுக்கூடல் கிராமத்தினர் கலெக்டரிடம் மனு
ADDED : மார் 25, 2025 07:55 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர்வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.
இதில், பட்டா, ஆக்கிரமிப்பு, குடிநீர், சாலை,உதவித்தொகை என, பல்வேறு வகையிலான கோரிக்கைகள் தொடர்பாக, 329 பேர் மனு அளித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் வாயிலாக பயிற்சி பெற்று, தமிழக அரசு பணியாளர்தேர்வாணையம் தேர்வில்குரூப் 4ல் தேர்வாகி பணிநியமன ஆணை பெற்ற வர்களை, கலெக்டர் கலைச்செல்வி நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.
ஆப்தமித்ரா தன்னார்வலர் திட்டத்தின் கீழ் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் கர்நாடகா அரசின் சார்பில், 21 நாள் ஒத்திகையுடன் கூடிய பயிற்சி முடித்து அதற்கான சான்றிதழ் பெற்ற முகேஷ்குமார் என்பவரையும் கலெக்டர் கலைச்செல்வி பாராட்டினார்
தொடர்ந்து மின்னணு குடும்ப அட்டை வேண்டி மனு அளித்த நான்குபயனாளிகள் மனு மீதுஉடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு புதியமின்னணு குடும்ப அட்டை கள் வழங்கப்பட்டன.
திருமுக்கூடல் கிராமத்தினர் அளித்த மனு விபரம்:
திருமுக்கூடல் கிராமத் தில், மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில், 20 கிராமத்தினர் பயன்படுத்தும்பேருந்து நிறுத்தம் உள்ளது.
இந்நிலையில், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள இடத்தை விட்டு, 100மீட்டர் துாரத்தில், அரசு பள்ளி எதிரே, புதிதாக பேருந்து நிழற்குடை கட்ட முயற்சி நடக்கிறது.
இதனால், முதியோர், தாய்மார்கள் என, பலரும் சிரமப்படுவர். புதிதாக கட்டப்படும் பேருந்து நிழற்குடை கட்டடம் பயன்பாடின்றி வீணாகும் நிலைவரும்.
எனவே, ஏற்கனவே பேருந்து நின்று செல்லும் இடத்திலேயே, புதிய பேருந்து நிறுத்தம் கட்ட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.