ADDED : ஜன 27, 2024 11:44 PM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் புதுப்பாளையம் தெருவில், சித்தி, புத்தி காசி விநாயகர்கோவில் உள்ளது. இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த பிள்ளையார்பாளையம், புதுப்பாளையத்தெரு, செங்குந்த சமுதாய அறக்கட்டளை ஸ்தாபன சங்கத்தினர் முடிவு செய்தனர்.
அதன்படி, கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு, டிச., 10ல் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
தொடர்ந்து இக்கோவிலில், தினமும், காலை 8:00 மணிக்கு மண்டலாபிஷேகம் நடந்து வந்தது. இதில், 48வது நாளான நேற்று முன்தினம்,மண்டலாஷேகம் நிறைவு விழா நடந்தது. விழாவையொட்டி காலை 9:30 மணிக்கு 108 சங்காபிஷேகம், கலச பூஜை, விநாயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
மாலை 6:00 மணிக்கு சித்தி, புத்தி தேவியருடன், காசி விநாயகருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு தேவியருடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய காசி விநாயக பெருமான் வீதியுலா வந்தார்.
நேற்று காலை 7:00 மணிக்கு கோபூஜை நடந்தது.