Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ நாகாத்தம்மன் கோவிலில் தீமிதி விழா விமரிசை

நாகாத்தம்மன் கோவிலில் தீமிதி விழா விமரிசை

நாகாத்தம்மன் கோவிலில் தீமிதி விழா விமரிசை

நாகாத்தம்மன் கோவிலில் தீமிதி விழா விமரிசை

ADDED : ஜூன் 09, 2025 11:30 PM


Google News
வாலாஜாபாத், வாலாஜாபாத் ஒன்றியம், குண்ணவாக்கம் நாகாத்தம்மன் கோவிலில், நடப்பாண்டிற்கான வைகாசி மாதம் விழா, கடந்த 6ம் தேதி, பந்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

அதை தொடர்ந்து அப்பகுதி கிராம தேவதை மற்றும் விநாயகர் கோவில்களில் அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நேற்று முன்தினம், அம்மனுக்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து, கங்கையில் இருந்து எல்லை கரகம் புறப்பாடும், அதை தொடர்ந்து குடம் அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.

மதியம் 2:00 மணிக்கு கோவில் வளாகத்தில் கூழ்வார்த்தல் விழா விமரிசையாக நடைபெற்றது. அதை தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு கோவில் எதிரில் அக்னி குண்டம் அமைத்து, தீமிதி விழா நடந்தது.

இதில், விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us