/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பெரியபாளையத்து அம்மன் கோவிலில் 14ல் தீமிதி திருவிழா பெரியபாளையத்து அம்மன் கோவிலில் 14ல் தீமிதி திருவிழா
பெரியபாளையத்து அம்மன் கோவிலில் 14ல் தீமிதி திருவிழா
பெரியபாளையத்து அம்மன் கோவிலில் 14ல் தீமிதி திருவிழா
பெரியபாளையத்து அம்மன் கோவிலில் 14ல் தீமிதி திருவிழா
ADDED : செப் 10, 2025 10:19 PM
காஞ்சிபுரம்:திருக்காலிமேடு பெரியபாளையத்தம்மன் கோவிலில், 35வது ஆண்டு தீமிதி திருவிழா வரும் 14ல் நடக்கிறது.
திருக்காலிமேடில் பெரியபாளையத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 35வது ஆண்டு கூழ்வார்த்தல் விழா மற்றும் தீமிதி திருவிழா வரும் 14ம் தேதி நடக்கிறது.
விழாவையொட்டி, தீமிதிக்கும் பக்தர்கள் காப்பு கட்டும் முதற்கட்ட நிகழ்வு நேற்று முன்தினம் துவங்கியது.
வரும் 14ம் தேதி காலை 6:00 மணிக்கு அம்மன் பூங்கரகம் வீதியுலாவும், பிற்பகல் 12:00 மணிக்கு கூழ்வார்த்தல். நிகழ்ச்சி நடைபெறும்.
மாலை 6:00 மணிக்கு காப்பு கட்டி விரதம் மேற்கொண்ட பக்தர்கள் தீமிதிக்கும் நிகழ்வும், இரவு 10:00 மணிக்கு அம்மன் வர்ணித்து கும்பம் படையலிடப் படுகிறது.