/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சிறுபால நீர்வழித்தடம் துார்வாரும் பணி துவக்கம் சிறுபால நீர்வழித்தடம் துார்வாரும் பணி துவக்கம்
சிறுபால நீர்வழித்தடம் துார்வாரும் பணி துவக்கம்
சிறுபால நீர்வழித்தடம் துார்வாரும் பணி துவக்கம்
சிறுபால நீர்வழித்தடம் துார்வாரும் பணி துவக்கம்
ADDED : ஜூன் 19, 2025 01:06 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில், நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ள சிறுபாலத்தின் நீர்வழித்தடங்களை துார்வாரும் பணி துவங்கிஉள்ளது.
தென்மேற்கு பருவமழையையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்டம் முழுதும் அனைத்து வகை கால்வாய்களையும் துார்வாரும்படி காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, காஞ்சிபுரம் உபகோட்டம் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை பிரிவு சார்பில், காஞ்சிபுரம் டி.கே.நம்பி தெரு, சி.எஸ்.செட்டி தெரு, காமராஜர் வீதி, நெல்லுக்காரத் தெரு, காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையோரம் உள்ள மழைநீர் வடிகால்வாய்களை துார்வாரினர்.
தற்போது, முக்கிய சாலை சந்திப்புகளில் சாலையின் குறுக்கே உள்ள சிறுபாலங்களின் நீர்வழித்தடங்களை துார்வாரும் பணியை துவக்கியுள்ளனர்.
அதன்படி, சின்ன காஞ்சிபுரம் டி.கே.நம்பி தெரு, சி.எஸ்., செட்டி தெரு பகுதியில் மழைநீர் செல்லும் சிறுபாலங்களின் நீர்வழித்தட பாதையை துார்வாரும் பணி நேற்று நடந்தது.
நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ள சிறுபாலத்தின் நீர்வழித்தடங்கள் அனைத்தும் துார்வாரி சீரமைக்கப்படும் என, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.