Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/அலையில் சிக்கி மாணவர் பலி

அலையில் சிக்கி மாணவர் பலி

அலையில் சிக்கி மாணவர் பலி

அலையில் சிக்கி மாணவர் பலி

ADDED : ஜன 27, 2024 11:57 PM


Google News
Latest Tamil News
சென்னை,சென்னை, வியாசர்பாடி, முத்து தெருவைச் சேர்ந்தவர் விஜய், 15; பிளஸ் 1 மாணவர். இவரது நண்பர்கள் பிளஸ் 2 மாணவரான சந்தோஷ், 16, ஷாம், 16, மற்றும் புவனேஷ், 15. நால்வரும், நேற்று, மாலை 4:00 மணியளவில், திருவொற்றியூர், கடற்கரைக்கு சென்றுள்ளனர்.

அங்கு, குளித்துக் கொண்டிருந்த நிலையில், ராட்சத அலையில் சிக்கி, நால்வரும் இழுத்துச் செல்லப்பட்டனர்.

இதில், விஜய் என்ற சிறுவனை மீனவர்கள் காப்பாற்றினர். இரவு 7:30 மணியளவில், துாண்டில் வளைவில் சந்தோஷ் என்பவரது உடல் சிக்கிக் கொண்டிருந்தது. மாயமான இருவரையும் தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us