Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் மூலவர் சன்னிதி பாலாலயம் விமரிசை

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் மூலவர் சன்னிதி பாலாலயம் விமரிசை

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் மூலவர் சன்னிதி பாலாலயம் விமரிசை

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் மூலவர் சன்னிதி பாலாலயம் விமரிசை

ADDED : ஜூன் 07, 2025 12:49 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 2006ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 17 ஆண்டுகள் கடந்த நிலையில், கோவிலில் பல்வேறு திருப்பணி செய்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து தமிழக அரசு, ஏகாம்பரநாதர் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து, 2023ம் ஆண்டு, ஜூன் மாதம் 28ல் முதற்கட்ட பாலாலயம் நடத்தப்பட்டது.

பணிகள் நிறைவு


தொடர்ந்து அரசு நிதி, ஆணையர் பொதுநல நிதி, திருக்கோவில் நிதி, உபயதாரர் நிதி என, மொத்தம் 28.48 கோடி ரூபாய் செலவில், 20க்கும் மேற்பட்ட திருப்பணிகள் மற்றும் அலுவலகம், அன்னதானக்கூடம், குளியல் அறை கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.

இவற்றில், பல்லவ கோபுரம், சிவகங்கை தீர்த்தம், கம்பா நதி தீர்த்தம், ஆயிரங்கால் மண்டபம் மேல்தளம் பழுது பார்த்தல், கோவிலுக்குள் மழைநீர் தேங்காமல் வடிகால்வாய் அமைத்தல் ஆகிய பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

தெற்கு ராஜகோபுரம் திருப்பணி முடியும் நிலையில் உள்ளது.

முதல் மற்றும் இரண்டாம் பிரகார தளம் பழுது பார்த்தல், மூன்றாம் பிரகாரம் கருங்கல் தரை அமைக்கும் பணி, இரண்டு, மூன்று, நான்காம் பிரகாரம் மதில்சுவர் பழுது பார்த்தல் பணி மற்றும் நடராஜர் சன்னிதி உள்ளிட்டவற்றை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

புனித நீர்


இரண்டாவது பாலாலயம் கடந்த ஆண்டு பிப்., 11ம் தேதியும், மூன்றாவது பாலாலயம் கடந்த பிப்., 10ம் தேதியும் நடந்தன.

தற்போது மூலவர் சன்னிதி திருப்பணிக்கான நான்காவது பாலாலயம் நேற்று காலை 8:30 மணிக்கு நடந்தது.

இதில், வேத விற்பன்னர்கள், புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட அத்தி மர பால லிங்கத்திற்கு புனித நீர் ஊற்றி பாலாலயம் நடத்தினர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவில் செயல் அலுவலர் முத்து லட்சுமி கூறுகையில், ''வரும் அக்., அல்லது நவ., மாதத்தில் கோவில் கும்பாபிஷேகம் நடத்தும் வகையில், அனைத்து திருப்பணியையும் விரைந்து முடிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us