/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தங்கத்தேர் நிறுத்தும் மண்டபம் கட்டுமான பூமிபூஜை துவக்கம் தங்கத்தேர் நிறுத்தும் மண்டபம் கட்டுமான பூமிபூஜை துவக்கம்
தங்கத்தேர் நிறுத்தும் மண்டபம் கட்டுமான பூமிபூஜை துவக்கம்
தங்கத்தேர் நிறுத்தும் மண்டபம் கட்டுமான பூமிபூஜை துவக்கம்
தங்கத்தேர் நிறுத்தும் மண்டபம் கட்டுமான பூமிபூஜை துவக்கம்
ADDED : ஜூன் 14, 2025 01:04 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் தங்கத் தேரை நிறுத்தி வைப்பதற்கான தேர் மண்டபம் கட்டுமானப்பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு தங்கத்தேர் செய்யும் திருப்பணிக்கான குழுவினர் வாயிலாக தங்கத்தேர் செய்யும் பணி நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து, கோவில் வளாகத்தில் தங்கத்தேரை பாதுகாப்பாக நிறுத்துவதற்கான தேர் மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று ஏகாம்பரநாதர் கோவில் வளாகத்தில் நடந்தது.
தங்கத்தேர் திருப்பணி குழுவின் பொறுப்பாளர் மகாலட்சுமி சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டி, தேர் மண்டபம் கட்டுமானப்பணிக்கான பூமி பூஜையை துவக்கி வைத்தார். இதில், ஏகாம்பரநாதர் கோவில் அர்ச்சகர் சிவாச்சாரியார் காமேஸ்வர குருக்கள் தலைமையில் வேதவிற்பன்னர்கள் பூமி பூஜையை நடத்தினர்.
நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, தங்கத்தேர் திருப்பணிக் குழு நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.