/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மீன் மார்க்கெட் வசதி குறித்து கேட்டறிந்த கலெக்டர் மீன் மார்க்கெட் வசதி குறித்து கேட்டறிந்த கலெக்டர்
மீன் மார்க்கெட் வசதி குறித்து கேட்டறிந்த கலெக்டர்
மீன் மார்க்கெட் வசதி குறித்து கேட்டறிந்த கலெக்டர்
மீன் மார்க்கெட் வசதி குறித்து கேட்டறிந்த கலெக்டர்
ADDED : மார் 21, 2025 01:11 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தாலுகாவில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி ஆய்வு நடத்தினர்.
அப்போது, காஞ்சிபுரம் மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து, ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள ரயில்வே ரோட்டில் உள்ள மீன் மார்க்கெட்டில் நேற்றும், கலெக்டர் கலைச்செல்வி ஆய்வு செய்தார்.
அப்போது, மீன் மார்க்கெட்டின் வசதிகள், வியாபாரிகள் மற்றும் நுகர்வோருக்கான வசதிகள் குறித்து கேட்டறிந்தார். குறிப்பாக, மீன் மார்க்கெட்டின் சுகாதார வசதிகள் குறித்தும் அவை முறையாக அகற்றப்படுகிறதா எனவும் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனர் நவேந்திரன் உடனிருந்தார்.