/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/தார் சாலை ஓரம் மண் கொட்டி சமன்படுத்தும் பணி துவக்கம்தார் சாலை ஓரம் மண் கொட்டி சமன்படுத்தும் பணி துவக்கம்
தார் சாலை ஓரம் மண் கொட்டி சமன்படுத்தும் பணி துவக்கம்
தார் சாலை ஓரம் மண் கொட்டி சமன்படுத்தும் பணி துவக்கம்
தார் சாலை ஓரம் மண் கொட்டி சமன்படுத்தும் பணி துவக்கம்
ADDED : ஜன 03, 2024 09:23 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் இருந்து, 2.5 கி.மீ., துாரம் உள்ள பொன்னேரிக்கரை சாலை, 1.30 கோடி ரூபாய் செலவில், சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்று உள்ளது. இந்த சாலை போடும் பணியால், சாலையின் உயரம் அதிகரித்து உள்ளது.
இதனால், சாலையின் இடதுபுறம் மண்ணை கொட்ட, மீடியனின் உயரமும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, சென்னையில் இருந்து, காஞ்சிபுரம் நகருக்குள் செல்லும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து, மீடியனை தாண்டி செல்லும் அபாயம் உள்ளது.
இதுதவிர, புதிதாக போடப்பட்ட சாலையின் இரு புறமும் மண்ணை அணைக்காததால் வாகனங்கள் கவிழும் அபாயம் இருந்தது.
இதுகுறித்தான செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, சாலை ஓரம் மண் அணைக்கும் பணியை தொழிலாளர்கள் துவக்கி உள்ளனர்.
இதேபோல, மீடியனின் உயரத்தையும் உயர்த்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.