/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சுந்தரம்மன், படவேட்டம்மனுக்கு ஊஞ்சல் சேவை உத்சவம் சுந்தரம்மன், படவேட்டம்மனுக்கு ஊஞ்சல் சேவை உத்சவம்
சுந்தரம்மன், படவேட்டம்மனுக்கு ஊஞ்சல் சேவை உத்சவம்
சுந்தரம்மன், படவேட்டம்மனுக்கு ஊஞ்சல் சேவை உத்சவம்
சுந்தரம்மன், படவேட்டம்மனுக்கு ஊஞ்சல் சேவை உத்சவம்
ADDED : செப் 14, 2025 11:04 PM

காஞ்சிபுரம்;ஆவணி திருவிழாவையொட்டி, சின்ன காஞ்சிபுரம் வி.என்.பெருமாள் தெரு, சுக்லபாளையம் கோவிந்தன் தெரு சுந்தரம்மன், படவேட்டம்மன் சுவாமி கோவிலில் ஊஞ்சல் சேவை உத்சவத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
சின்ன காஞ்சிபுரம், வி.என்.பெருமாள் தெரு, சுக்லபாளையம் கோவிந்தன் தெரு சுந்தரம்மன், படவேட்டம்மனுக்கு 43வது ஆண்டு ஆவணி திருவிழா மற்றும் 14வது ஆண்டு தீமிதி வசந்த விழா, கடந்த 11ம் தேதி, விக்ன விநாயகருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் துவங்கியது.
மாலை 4:30 மணிக்கு சின்ன வேப்பங்குளக்கரையில் ஜலம் திரட்டும் நிகழ்வு நடந்தது.
இரண்டாம் நாள் விழாவான கடந்த 12ம் தேதி, இரவு 7:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது.
மூன்றாம் நாள் விழாவான நேற்று முன்தினம், இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் சேவை உத்சவம் நடந்தது. இதில், சுந்தரம்மனும், படவேட்டம்மனும் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
நான்காம் நாள் விழாவான நேற்று, காலை 9:00 மணிக்கு அம்மன் பூங்கரகம் வீதியுலாவும், பிற்பகல் 12:00 மணிக்கு கூழ்வார்த்தலும், இரவு 7:00 மணிக்கு தீமிதி வசந்த விழாவும் நடந்தது. இரவு 9:00 மணிக்கு அம்மனுக்கு கும்பம் படையலிடப்பட்டது.
இன்று, காலை 9:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், மதியம் 1:00 மணிக்கு சீர்கஞ்சி வார்க்கும் நிகழ்வும் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு ஊரணி பொங்கல், மஞ்சள் நீராட்டுடன் அம்மன், மணிகண்டீஸ்வரர் கோவிலுக்கு புறப்பாடு நடக்கிறது.