ADDED : பிப் 06, 2024 04:18 AM
ஏனாத்துார் : காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெகத்குரு, சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருளானையின்படி, மடத்தின் பல்வேறு சேவை அமைப்புகளில் ஒன்றான சங்கரா சமுதாய கல்லூரி காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூரிலும், திருவள்ளூர் மாவட்டம் தண்டலத்திலும் இயங்கி வருகிறது.
இவ்விரு மாவட்டங்களைச் சார்ந்த ஏழை எளிய மக்களுக்காக, தொழிற்கல்வி சார்ந்த படிப்புகளான தையற்கல்வி, 'ஏசி' மெக்கானிக், மொபைல் போன் சர்வீஸ், கணினி பழுது நீக்கும் பயிற்சி, டீ.டி.பி., போன்ற பல பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
படிப்பை தொடர இயலாதவர்கள், கணவனால் கைவிடப்பட்டோர், விதவைகள் மற்றும் ஏழை எளிய மாணவர்கள் இப்பயிற்சியினை மேற்கொண்டு பயனடைந்து வருகின்றனர்.
இக்கல்லுாரிக்கு சென்னை, ரானே நிறுவனம் சார்பில், நன்கொடையாக கம்ப்யூட்டர் வழங்கும் விழா நேற்று நடந்தது.
இதில், நிறுவனத்தின், மனிதவளத் துறை தலைமை நிர்வாகி விஜயலட்சுமி, சங்கரா கல்லுாரி முதல்வர் முனைவர் கலை ராம வெங்கடேசனிடம், கம்ப்யூட்டர்களை வழங்கினார்.
இவ்விழாவில், ரானே நிறுவனத்தின் கண்ணன், சங்கரா சமுதாயக் கல்லுாரி ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீதர், சுரேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.