/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ரூ.55 லட்சம் செலவில் வேளாண் இயந்திரங்கள் வழங்கல் ரூ.55 லட்சம் செலவில் வேளாண் இயந்திரங்கள் வழங்கல்
ரூ.55 லட்சம் செலவில் வேளாண் இயந்திரங்கள் வழங்கல்
ரூ.55 லட்சம் செலவில் வேளாண் இயந்திரங்கள் வழங்கல்
ரூ.55 லட்சம் செலவில் வேளாண் இயந்திரங்கள் வழங்கல்
ADDED : ஜூன் 28, 2025 02:05 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் 55 லட்சம் ரூபாய் செலவில் வேளாண் இயந்திரங்கள் நேற்று வழங்கப்பட்டன.
காஞ்சிபுரம் மக்கள் நல்லுறவு கூட்டரங்கில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமை வகித்தார்.
உத்திரமேரூர் தி.மு.க., - -எம்.எல்.ஏ., சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் தி.மு.க., - -எம்.பி., செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
இதில், 55.80 லட்சம் ரூபாய் செலவில், கீழம்பி, காவாந்தண்டலம், தாமல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் பராமரிப்பு முகாமினை மூவரும் துவக்கி வைத்தனர்.
இதில், வேளாண் இணை இயக்குநர் ராஜ்குமார், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ஆர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.