/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் 513 பேருக்கு சான்றிதழ் வழங்கல் கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் 513 பேருக்கு சான்றிதழ் வழங்கல்
கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் 513 பேருக்கு சான்றிதழ் வழங்கல்
கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் 513 பேருக்கு சான்றிதழ் வழங்கல்
கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் 513 பேருக்கு சான்றிதழ் வழங்கல்
ADDED : ஜூன் 09, 2025 11:22 PM

காஞ்சிபுரம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில், கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் கடந்த ஏப்., 1ம் துவங்கியது.
ஐந்து கட்டமாக நடந்த நீச்சல் பயிற்சியில் சிறுவர் - -சிறுமியர் ஆர்வமுடன் பங்கேற்றனர். கோடைக்கால முகாமின் நிறைவாக, ஐந்தாவது கட்ட நீச்சல் பயிற்சி முகாம் கடந்த மாதம் 27ம் தேதி துவங்கி நேற்று முன்தினத்துடன் நிறைவு பெற்றது.
நீச்சல் பயிற்சியை நிறைவு செய்த 54 பேருக்கு சான்றிதழ் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடந்தது.
இதில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி, நீச்சல் அசோசியேஷன் பொருளாளர் ஆறுமுகம், நீச்சல் பயிற்சியாளர்கள் உள்ளிட்டோர் சான்றிதழ் வழங்கினர்.
நடப்பு ஆண்டு, ஏப்., 1 முதல் ஜூன் 6 வரை ஐந்து கட்டங்களாக நடந்த கோடைக்கால நீச்சல் பயிற்சி முகாமில் பங்கேற்று நீச்சல் பயிற்சியை நிறைவு செய்த 513 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என, காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி தெரிவித்தார்.