ADDED : மே 23, 2025 09:31 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பகலில் 100 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகி வருவதால், முதியோர், நோயாளிகள், குழந்தைகள் என பல தரப்பினரும் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் நகரில் நேற்றிரவு 7:30 மணிக்கு திடீரென கனமழை பெய்ய துவங்கியது. காஞ்சிபுரம் நகர் முழுதும் அரை மணி நேரத்திற்கு மேல் கனமழை பெய்தது. சுற்றியுள்ள செவிலிமேடு, ஓரிக்கை, காரை, கோனேரிக்குப்பம், கீழம்பி, கீழ்கதிர்பூர் போன்ற ஊர்களில் லேசான மழையும் பெய்ததால், இரவில் குளிர்ச்சி நிலவியது.
கோடை வெயிலால் பாதிக்கப்பட்டு வந்த அனைத்து தரப்பினருக்கும் நேற்றிரவு பெய்த மழை, சற்று ஆறுதல் அளித்தது.