/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/உத்திரமேரூரில் மாற்றுப்பயிருக்கு தயாராகும் கரும்பு விவசாயிகள் உத்திரமேரூரில் மாற்றுப்பயிருக்கு தயாராகும் கரும்பு விவசாயிகள்
உத்திரமேரூரில் மாற்றுப்பயிருக்கு தயாராகும் கரும்பு விவசாயிகள்
உத்திரமேரூரில் மாற்றுப்பயிருக்கு தயாராகும் கரும்பு விவசாயிகள்
உத்திரமேரூரில் மாற்றுப்பயிருக்கு தயாராகும் கரும்பு விவசாயிகள்
ADDED : பிப் 25, 2024 02:21 AM

உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியத்தில், சாத்தணஞ்சேரி, சீட்டணஞ்சேரி, குருமஞ்சேரி, களியப்பேட்டை, ராஜம்பேட்டை, ஒர்க்காட்டுப்பேட்டை, காவியதண்டலம், காவூர், கரும்பாக்கம், அரும்புலியூர், திருவானைக்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு விவசாயம் பிரதானமாக உள்ளது.
இப்பகுதிகளில் உற்பத்தி செய்யும் கரும்புகளை மதுராந்தகம் ஒன்றியம், படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அரவைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
இந்நிலையில், உத்திரமேரூர் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில், கடந்த நாட்களில் கரும்புக்கு பதிலாக மாற்றுப்பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.
வெட்டுக்கூலி அதிகரிப்பு
சீட்டணஞ்சேரி கரும்பு மண்டலத்தில் கடந்த ஆண்டு 1,110 ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பு பயிரிடப்பட்டதாகவும், நடப்பு ஆண்டுக்கு 900 ஏக்கர்நிலப்பரப்பில் மட்டும்கரும்பு பயிரிடப்பட்டு உள்ளதாக சீட்டணஞ்சேரி கரும்பு மண்டல அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தமிழ்நாடு கரும்பு விவசாய சங்க மாநில தலைவரும், சாத்தணஞ்சேரி கரும்பு விவசாயியுமான தனபால் கூறியதாவது:
கட்டுப்படியாகாத கரும்பு விலை மற்றும் வெட்டுக்கூலி அதிகரிப்பு போன்ற காரணங்களால் கரும்பு சாகுபடி குறைந்து வருகிறது. 1,000 கிலோ கொண்ட கரும்புக்கு 3,114 ரூபாய் தற்போது வழங்கப்படுகிறது.
இதில், வெட்டுக்கூலிக்கு மட்டும் 1,500 ரூபாய் செலவாகிறது. ஆக கரும்புக்கான மொத்த விலையில் 50 சதவீதம் வெட்டுக்கூலிக்கு மட்டும் செலவு செய்ய வேண்டி உள்ளது.
கரும்பு உற்பத்திக்கான மற்ற செலவுகளை கணக்கிட்டால் கரும்பு விவசாயத்தின் நஷ்டத்தை உணர முடியும்.
சமீபத்தில் வெளியான தமிழக அரசின் வேளாண்துறை பட்ஜெட்டில், கரும்புக்கான ஊக்கத்தொகை, 1,000 கிலோவிற்கு 195 ரூபாயில் இருந்து, 20 ரூபாய் கூடுதலாக்கி தற்போது 215 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 500 ரூபாய் வரை வழங்க வேண்டும் என கோரி வந்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.