Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பஸ்சில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் ஆபத்தை உணராமல் அட்டூழியம்

பஸ்சில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் ஆபத்தை உணராமல் அட்டூழியம்

பஸ்சில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் ஆபத்தை உணராமல் அட்டூழியம்

பஸ்சில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் ஆபத்தை உணராமல் அட்டூழியம்

ADDED : செப் 05, 2025 01:52 AM


Google News
Latest Tamil News
உத்திரமேரூர்:அரசு பேருந்தில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்வதை தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர் .

உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் இருந்து, திருப்புலிவனம், கருவேப்பம்பூண்டி, மணல்மேடு, மாகரல் வழியாக, காஞ்சிபுரத்திற்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல, காஞ்சிபுரத்தில் இருந்து, சிலாம்பாக்கம், மலையாங்குளம், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த பேருந்துகளை பயன்படுத்தி தினமும், 1,000க்கும் மேற்பட்டோர் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர்.

இந்நிலையில், உத்திரமேரூரில் இருந்து, காஞ்சிபுரத்திற்கு தடம் எண்34 பேருந்து, தினமும் 12 முறை இயக்கப்படுகிறது.

இப்பேருந்து, நேற்று காலை 9:20 மணிக்கு வழக்கம்போல காஞ்சிபுரத்திற்கு சென்று கொண்டிருந்தது. திருப்புலிவனம் பகுதியில் பேருந்து சென்றபோது, உள்ளே இடம் இருந்தும் பள்ளி மாணவர்கள் பேருந்தின் பின்புறத்திலும், படிக்கட்டுகளிலும் தொங்கியப்படி ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளனர்.

இதுபோன்று, பேருந்துகளின் படியில் தொங்கியபடி பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பயணம் செய்வது அதிகரித்து வருவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எனவே, பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்வதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து, உத்திரமேரூர் போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் நாராயணன் கூறியதாவது:

உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளில் செல்லும் அரசு பேருந்துகளில், பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்வதாக, பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார் வருகின்றன.

இதை, தடுக்க ஒவ்வொரு பேருந்திலும் தானியங்கி கதவு பொருத்தப்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களில் படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணம் செய்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடு க்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் கூறுகையில், ''உத்திரமேரூர் செல்லும் பேருந்துகளின் படிக்கட்டுகளில் பள்ளி மாணவர்கள் பயணம் செய்வதை தடுக்க, காலை மற்றும் மாலை நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுப டுத்தப்பட்டு உள்ளனர்.

''அதையும் மீறி ஆபத்தான முறையில் பயணம் செய்வோர் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us