/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ விடுமுறைக்குப் பின் பள்ளி திறப்பு மாணவ - மாணவியர் உற்சாகம் விடுமுறைக்குப் பின் பள்ளி திறப்பு மாணவ - மாணவியர் உற்சாகம்
விடுமுறைக்குப் பின் பள்ளி திறப்பு மாணவ - மாணவியர் உற்சாகம்
விடுமுறைக்குப் பின் பள்ளி திறப்பு மாணவ - மாணவியர் உற்சாகம்
விடுமுறைக்குப் பின் பள்ளி திறப்பு மாணவ - மாணவியர் உற்சாகம்
ADDED : ஜூன் 03, 2025 12:54 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், வாலாஜாபாத், காஞ்சிபுரம் ஆகிய ஐந்து ஒன்றியங்களில் தொடக்கம், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என, 657 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. கோடை விடுமுறைக்குப்பின் நேற்று இப்பள்ளி அனைத்தும் திறக்கப்பட்டது.
முதல் நாளான நேற்று, மாணவ - மாணவியர் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றதை காண முடிந்தது. பள்ளி துவக்க நாளிலேயே மாணவ - மாணவியருக்கு பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம், சீருடை உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டதோடு புதிய மாணவர் சேர்க்கையும் நடந்தது.