/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் 670 மனுக்கள் குவிந்தன 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் 670 மனுக்கள் குவிந்தன
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் 670 மனுக்கள் குவிந்தன
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் 670 மனுக்கள் குவிந்தன
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் 670 மனுக்கள் குவிந்தன
ADDED : செப் 14, 2025 02:07 AM
வாலாஜாபாத்,:கட்டவாக்கத்தில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் 670 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
வாலாஜாபாத் ஒன்றியம், கட்டவாக்கம் ஊராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நேற்று நடந்தது.
உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று மக்களிடம் மனுக்கள் பெற்று துவக்கி வைத்தார்.
ஊத்துக்காடு, நாய்க்கன்குப்பம், புத்தகரம் மற்றும் கட்டவாக்கம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் முகாமில் பங்கேற்றனர்.
முகாமில் சாதி சான்று, பட்டா மாற்றம், விதவை மற்றும் முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார் மற்றும் ரேஷன் அட்டை திருத்தம் உள்ளிட்ட 15 துறைகள் சார்ந்த 45 சேவைகளுக்கான 670 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை துறை சார்ந்த அதிகாரிகள் பரிசீலித்து 16 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. வாலாஜாபாத் ஒன்றியக்குழு தலைவர் தேவேந்திரன், துணைத் தலைவர் சேகர் மற்றும் அந்தந்த பகுதி ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.