/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ அடிப்படை வசதிகள் இல்லாத ஸ்ரீபெரும்புதுார் பஸ் நிலையம் அடிப்படை வசதிகள் இல்லாத ஸ்ரீபெரும்புதுார் பஸ் நிலையம்
அடிப்படை வசதிகள் இல்லாத ஸ்ரீபெரும்புதுார் பஸ் நிலையம்
அடிப்படை வசதிகள் இல்லாத ஸ்ரீபெரும்புதுார் பஸ் நிலையம்
அடிப்படை வசதிகள் இல்லாத ஸ்ரீபெரும்புதுார் பஸ் நிலையம்
ADDED : மே 16, 2025 02:19 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையத்தில் இருந்து, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஸ்ரீபெரும்புதுார் சுற்றியுள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு செல்லும் ஏராளமான ஊழியர்கள், தினமும் பேருந்து நிலையம் வந்து செல்கின்றனர்.
தவிர, ஸ்ரீபெரும்புதுார் சுற்றுவட்டாரத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட கிராமத்தில் இருந்து, கல்லுாரி மற்றும் பல்வேறு தேவைக்காக ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பேருந்து நிலையம் வளாகம் பராமரிப்பு படுமோசமாக உள்ளது. பாலுாட்டும் பெண்கள் அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செயல்படாமலே உள்ளது.
மேலும், பயணியர் இருக்கை, மற்றும் காத்திருப்பு பகுதிகளில் நரிக்குறவர்கள் ஆக்கிரமித்து உள்ளனர்.
பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
எனவே, ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி அதிகாரிகள் பேருந்து நிலையத்தில், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, முறையாக பராமரிக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.