/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு சிறப்பு வழிபாடுதேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு
தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு
தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு
தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு
ADDED : ஜன 04, 2024 10:26 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள கால பைரவருக்கு மார்கழி தேய்பிறை அஷ்டமியை ஒட்டி, நேற்று முன்தினம் மாலை, பால், தயிர், மஞ்சள், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது.
காஞ்சிபுரம் அடுத்த, கிளார் கிராமத்தில் அறம் வளர் நாயகி உடனுறை அகத்தீஸ்வரர் கோவிலில், கால பைரவருக்கு நேற்று மாலை சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது.
காஞ்சிபுரம் சர்வதீர்த்தம் கிழக்கு, அனுமந்தீஸ்வரர், யோக லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள குரு பைரவருக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் நடந்தது.