ADDED : ஜூன் 13, 2025 07:52 PM
ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம், சென்னக்குப்பம், வடக்குப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் தங்கி பணிப்புறிந்து வருகின்றனர்.
இந்த பகுதிகளில் உள்ள பெட்டிகடைகளில், அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் அதிகமாக விற்பனை செய்வதாக ஒரகடம் போலீசாருக்கு தொடர் புகார் வந்தது.
இந்நிலையில் போலீசார் நேற்று, சென்னக்குப்பம் மற்றும் வடக்குப்பட்டு பகுதிகளில் உள்ள பெட்டி கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், விற்பனைக்காக குட்கா பொருட்களை மறைத்து வைத்திருந்த சுதாகர், 44, திலீப்குமார், 24, ரமேஷ், 39, குன்னி, 29, கங்காதரன், 44, அப்பியம்மாள், 50, ஆகிய ஆறு பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 98,000 ரூபாய் மதிப்புள்ள 37 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.