/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சாலையில் கழிவுநீர் சுகாதார சீர்கேடு சாலையில் கழிவுநீர் சுகாதார சீர்கேடு
சாலையில் கழிவுநீர் சுகாதார சீர்கேடு
சாலையில் கழிவுநீர் சுகாதார சீர்கேடு
சாலையில் கழிவுநீர் சுகாதார சீர்கேடு
ADDED : ஜூன் 25, 2025 01:45 AM

காஞ்சிபுரம்:பெரிய காஞ்சிபுரம் பஞ்சுபேட்டை குபேர ஈஸ்வரர் கோவிலுக்கு செல்லும் சாலையில் கழிவுநீர் வழிந்தோடுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
பெரிய காஞ்சிபுரம் பஞ்சுபேட்டை பெரிய தெருவில், குபேர ஈஸ்வரர் கோவில் அமைந்துள்ள பகுதியில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இக்கோவிலுக்கு தினமும் திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கோவிலுக்கு செல்லும் சாலையில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, 'மேன்ஹோல்' வழியாக கழிவுநீர், ஒரு வாரமாக வெளியேறி வருகிறது.
இப்பகுதியில் சாலையில் கழிவுநீர் வழிந்தோடுவதால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, பஞ்சுபேட்டை பெரிய தெரு, குபேர ஈஸ்வரர் கோவில் அருகில், பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.