/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ குழாய் உடைந்து வெளியேறும் குடிநீரால் பல்லாங்குழியான சர்வீஸ் சாலை குழாய் உடைந்து வெளியேறும் குடிநீரால் பல்லாங்குழியான சர்வீஸ் சாலை
குழாய் உடைந்து வெளியேறும் குடிநீரால் பல்லாங்குழியான சர்வீஸ் சாலை
குழாய் உடைந்து வெளியேறும் குடிநீரால் பல்லாங்குழியான சர்வீஸ் சாலை
குழாய் உடைந்து வெளியேறும் குடிநீரால் பல்லாங்குழியான சர்வீஸ் சாலை
ADDED : செப் 10, 2025 03:15 AM

ஸ்ரீபெரும்புதுார்:மாத்துார் அரசு பள்ளி எதிரே, குழாய் உடைந்து வெளியேறும் குடிநீரால், சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மாத்துார் ஊராட்சியில், 2,000க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளுக்கு, ஆழ்துளை கிணற்றில் இருந்து, குழாய் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார் --- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில், மாத்துார் அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே உள்ள, சர்வீஸ் சாலை நடுவே, பூமிக்கு அடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகி வருகிறது.
இரண்டு மாதங்களுக்கு மேலாக, குழாய் உடைந்து வெளியேறும் குடிநீரால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான லிட்டர் வீணாகி வருகிறது.
மேலும், சர்வீஸ் சாலை நடுவே குடிநீர் வழிந்து வெளியேறுவதால், அவ்வழியாக வரும் வாகனங்களால், அப்பகுதியில் ராட்சத பள்ளம் ஏற்பட்டு உள்ளது.
இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. தவிர, பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவ - மாணவியர் மீது தண்ணீர் தெளிப்பதால், மனஉளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே, மாத்துார் சர்வீஸ் சாலையில், அரசு பள்ளி எதிரே உடைப்பு ஏற்பட்டு சாலையில் வெளியேறும் குடிநீர் குழாயை சரி செய்ய, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.