ADDED : ஜூலை 02, 2025 12:36 AM
ஏனாத்துார்:காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்துாரில் உள்ள சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலையில், 'இந்தியாவின் உற்பத்தி துறையின் எதிர்காலத்தை வடிவமைத்தல்- புதுமை, திறமை மற்றும் கல்வியின் பங்கு' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடந்தது.
பல்கலை துணைவேந்தர் சீனிவாசு வரவேற்றார். சென்னை சன்மார் குழுமம் தலைவர் குமார், சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் பேராசிரியர் காமகோட்டி, மணிபால் கல்வி மற்றும் மருத்துவ குழுமம் துணைத்தலைவர் மற்றும் மேலாளர் வைத்தீஸ்வரன் ஆகியோர் பேசினர்.
இதில், பல்வேறு கல்லுாரியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர். வேலை வாய்ப்பு துறை அதிகாரி முனைவர் கண்ணன் நன்றி கூறினார்.