ADDED : மே 21, 2025 08:06 PM
காஞ்சிபுரம்:திம்மசமுத்திரம், ஒலிமுகமதுபேட்டை என, பல்வேறு இடங்களில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதும், அதை குடிமை பொருள் அதிகாரிகள் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளும் அடிக்கடி நடக்கின்றன.
அதன் தொடர்ச்சியாக, காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஏகாம்பரபுரம் தெருவைச் சேர்ந்த மதியழகன் என்பவர் ஓட்டி வந்த, 'டிவிஎஸ் எக்ஸ்எல்' இருசக்கர வாகனத்தை சோதனை செய்தனர். அதையடுத்து, இருசக்கர வாகனத்தில், கடத்தி வந்த இரண்டு மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
மேலும், அதே தெருவில் ஒரு அறையில் பதுக்கி வைத்திருந்த, 51 சிப்பங்களில் இருந்த 2,400 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். அவற்றை சிறுகாவேரிபாக்கம் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.