/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/சிதறிக்கிடந்த மனித எலும்புகள் திருமங்கலத்தில் சலசலப்புசிதறிக்கிடந்த மனித எலும்புகள் திருமங்கலத்தில் சலசலப்பு
சிதறிக்கிடந்த மனித எலும்புகள் திருமங்கலத்தில் சலசலப்பு
சிதறிக்கிடந்த மனித எலும்புகள் திருமங்கலத்தில் சலசலப்பு
சிதறிக்கிடந்த மனித எலும்புகள் திருமங்கலத்தில் சலசலப்பு
ADDED : பிப் 25, 2024 02:25 AM

சென்னை, தனியார் பள்ளி அருகில்,சாலையோரத்தில் குவிந்திருந்த குப்பை அருகில் கிடந்த மனித எலும்புகளால் சலசலப்பு ஏற்பட்டது.
திருமங்கலம் கிழக்கு வாசல் சாலை மின்மாற்றி அருகில், நேற்று அதிகாலை சாலையோரத்தில் குப்பை குவிந்திருந்த இடத்தில், மனித மண்டை ஓடு, கால் எலும்பு உள்ளிட்ட எலும்பு துண்டுகள் சிதறிக்கிடந்தன.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர், திருமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், எலும்பு கூடுகளை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது :
கைப்பற்றப்பட்ட எலும்புகள் முழுதும், 10 ஆண்டுகளுக்கு மேல் பதப்படுத்தப்பட்டவை. அவற்றில் 'வார்னிஷ்' அடித்து வைக்கப்பட்டிருப்பதால், மருத்துவ மாணவர்களின் பயிற்சிக்காக பயன்படுத்தியவை என்பது தெரிய வந்துள்ளது.
அண்ணா நகர், திருமங்கலம் பகுதியில் பயிற்சி நிலையங்கள் அதிகம் இருப்பதால், படிப்புக்காக பயன்படுத்தி இருக்கலாம். கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, குப்பையில் வீசியவர்கள் குறித்து விசாரிக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.