Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/பாலாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க... ரூ.75 கோடி: பேரிடர் காலத்தில் ஏற்படும் இடர்பாடுகளுக்கு தீர்வு

பாலாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க... ரூ.75 கோடி: பேரிடர் காலத்தில் ஏற்படும் இடர்பாடுகளுக்கு தீர்வு

பாலாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க... ரூ.75 கோடி: பேரிடர் காலத்தில் ஏற்படும் இடர்பாடுகளுக்கு தீர்வு

பாலாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க... ரூ.75 கோடி: பேரிடர் காலத்தில் ஏற்படும் இடர்பாடுகளுக்கு தீர்வு

ADDED : செப் 01, 2025 01:56 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:வாலாஜாபாத் - அவளூர் இடையே உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு, 75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, கட்டுமான பணிக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, போக்குவரத்து தடைபட்டு வரும் நிலையில், இந்த பாலம் அமைந்தால், 15 கிராமங்களை சேர்ந்தோர் பயனடைவர் என நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர். வாலாஜாபாதில் இருந்து, பாலாறு தரைப்பாலம் வழியாக அவளூர் கிராமத்திற்கு செல்லும் 1.2 கி.மீ., தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலத்தின் வழியாக, அங்கம்பாக்கம், அவளூர், கன்னடியன் குடிசை, கணபதிபுரம், மல்லிகாபுரம், கம்மராஜபுரம், இளையனார்வேலுார் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள், வாலாஜாபாத் வழியாக தாம்பரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போதெல்லாம், வாலாஜாபாத் - அவளூர் இடையே செல்லும் தரைப்பாலம் நீரில் மூழ்கி, வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபடும்.

இது போன்ற நேரங்களில், அங்கம்பாக்கம், அவளூர், கன்னடியன் குடிசை, கணபதிபுரம், மல்லிகாபுரம், கம்மராஜபுரம், இளையனார்வேலுார் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள், காஞ்சிபுரம், வாலாஜாபாத் வழியாக 30 கி.மீ., துாரம் சுற்றிக் கொண்டு தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டி உள்ளது.

பேரிடர் காலங்களில் இது போல ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்க, வாலாஜாபாத் - அவளூர் இடையே உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

நெடுஞ்சாலை துறையினரோ 1 கோடி, 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தற்காலிக சீரமைப்பு பணிகளை மட்டுமே செய்து வந்தனர்.

நிரந்தரமாக தீர்வு காணும் வகையில் உயர்மட்ட பாலம் வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். சட்டசபை கூட்டத்தொடரிலும் உத்திரமேரூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், உயர்மட்ட தரைப்பாலம் வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.

இதை ஏற்று, கடந்த ஆண்டு வாலாஜாபாத் - அவளூர் இடையே உயர்மட்ட தரைப்பாலத்திற்கு மண் பரிசோதனைகள் செய்து, விரிவான திட்ட மதிப்பீடு தயாரித்து, அரசு ஒப்புதலுக்கு நெடுஞ்சாலை துறை அனுப்பி இருந்தது.

இதை ஏற்று, 75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, புதிய உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமான பணிகளை, நெடுஞ்சாலை துறை சிறப்பு திட்டப்பிரிவு செய்ய உள்ளது.

இந்த உயர்மட்ட பாலப்பணி நிறைவு பெற்றால், பேரிடர் காலங்களில் 30 கி.மீ., துாரம் சுற்றிச் செல்லும் அலைச்சல் இருக்காது என நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர்.

இது குறித்து, நெடுஞ்சாலை துறை சிறப்பு திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வாலாஜாபாத் - அவளூர் இடையே உயர்மட்ட தரைப்பாலம் கட்டுவதற்கு 75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டெண்டர் விடும் பணியும் நிறைவு பெற்றுள்ளது.

இதில், 15 மீட்டர் அகலம், 715 மீட்டர் நீளத்தில் உயர்மட்ட பாலம் கட்டப்பட உள்ளது. இந்த பாலப்பணிக்கு கடந்த ஆண்டு மண் பரிசோதனை செய்து, உறுதி தன்மை அறியப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கி, இரு ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, போக்குவரத்து தடைபட்டு வரும் நிலையில், இந்த பாலம் அமைந்தால், 15 கிராமங்களை சேர்ந்தோர் பயனடைவர்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us