/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ விதிமீறிய 748 வாகனங்களுக்கு 5 மாதங்களில் ரூ.1 கோடி அபராதம் விதிப்பு விதிமீறிய 748 வாகனங்களுக்கு 5 மாதங்களில் ரூ.1 கோடி அபராதம் விதிப்பு
விதிமீறிய 748 வாகனங்களுக்கு 5 மாதங்களில் ரூ.1 கோடி அபராதம் விதிப்பு
விதிமீறிய 748 வாகனங்களுக்கு 5 மாதங்களில் ரூ.1 கோடி அபராதம் விதிப்பு
விதிமீறிய 748 வாகனங்களுக்கு 5 மாதங்களில் ரூ.1 கோடி அபராதம் விதிப்பு
ADDED : ஜூன் 13, 2025 01:26 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் வட்டார போக்குவரத்து எல்லைக்குட்பட்ட பகுதிகளில், ஐந்து மாதங்களில் விதிமீறிய 748 வாகனங்களுக்கு, 1 கோடியே 52,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
ஸ்ரீபெரும்புதுார் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கிருஷ்ணன், ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.
அதில், ஜன., - மே மாதம் வரை, ஐந்து மாதங்களில், அதிக பாரம், ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல் சென்றது, அதிக வேகம், லைசென்ஸ், இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனத்தை இயக்கியது, மொபைல் போனில் பேசியபடி வாகனத்தை ஓட்டிச் சென்றது உள்ளிட்ட விதிமுறை மீறலில் ஈடுபட்டதாக 748 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அதன் வாயிலாக, 1 கோடியே, 52,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.