/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பெருநகர் செய்யாற்று பாலத்தில் வளர்ந்துள்ள அரச மரச்செடிகள் பெருநகர் செய்யாற்று பாலத்தில் வளர்ந்துள்ள அரச மரச்செடிகள்
பெருநகர் செய்யாற்று பாலத்தில் வளர்ந்துள்ள அரச மரச்செடிகள்
பெருநகர் செய்யாற்று பாலத்தில் வளர்ந்துள்ள அரச மரச்செடிகள்
பெருநகர் செய்யாற்று பாலத்தில் வளர்ந்துள்ள அரச மரச்செடிகள்
ADDED : ஜூன் 05, 2025 02:10 AM

உத்திரமேரூர்:காஞ்சிபுரம் -- வந்தவாசி நெடுஞ்சாலை, பெருநகருக்கும், வெள்ளாமலைக்கும் இடையே செல்லும் செய்யாற்றின் குறுக்கே, உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்த பாலத்தின் வழியே தினமும், 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், ஜல்லி, எம்.சான்ட் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களும் இந்த பாலத்தின் வழியே செல்கின்றன.
இந்நிலையில், பாலம் முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால், பாலத்தில் அரச மரச்செடிகள் வளர்ந்து வருகின்றன. இவற்றின் வேர்கள் பாலத்தில் உள்ள சிறு விரிசல்கள் வழியாக உள்ளே சென்று, அதன் உறுதித்தன்மை பாதிக்கிறது.
மேலும், செடிகள் பெரிதாக வளரும்போது பாலம் முழுதுமாக பலவீனமடைந்து வீணாக வாய்ப்பு உள்ளது.
எனவே, பாலத்தில் வளர்ந்துள்ள அரச மரச்செடிகளை அகற்ற, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.