/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காய்கறி வியாபாரியிடம் பணம் பறித்த ரவுடி கைது காய்கறி வியாபாரியிடம் பணம் பறித்த ரவுடி கைது
காய்கறி வியாபாரியிடம் பணம் பறித்த ரவுடி கைது
காய்கறி வியாபாரியிடம் பணம் பறித்த ரவுடி கைது
காய்கறி வியாபாரியிடம் பணம் பறித்த ரவுடி கைது
ADDED : மார் 20, 2025 08:44 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியில் வசிக்கும் இளங்கோ, 32. என்பவர், காஞ்சிபுரம் நகரில், மாட்டு வண்டியில் காய்கறி வியாபாரம் செய்கிறார்.
இந்நிலையில், பிள்ளையார்பாளையம் கிழக்கு பகுதியில், நேற்று வியாபாரம் செய்த போது, இவரிடம், உதயா, 19 என்ற சரித்திர பதிவேடு குற்றவாளி, மது அருந்த 2,000 ரூபாய் பணம் கேட்டுள்ளார்.
தர மறுத்த இளங்கோவை மிரட்டி, கத்தியை காட்டி 1,000 ரூபாய் பணம் எடுத்து சென்று விட்டதாக, சிவகாஞ்சி போலீசில் இளங்கோ புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தி, தப்பியோடிய உதயாவை நேற்று கைது செய்தனர்.