/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ போதை பயணத்தை தடுப்பது குறித்து சாலையோரத்தில் விழிப்புணர்வு பதாகை போதை பயணத்தை தடுப்பது குறித்து சாலையோரத்தில் விழிப்புணர்வு பதாகை
போதை பயணத்தை தடுப்பது குறித்து சாலையோரத்தில் விழிப்புணர்வு பதாகை
போதை பயணத்தை தடுப்பது குறித்து சாலையோரத்தில் விழிப்புணர்வு பதாகை
போதை பயணத்தை தடுப்பது குறித்து சாலையோரத்தில் விழிப்புணர்வு பதாகை
ADDED : செப் 01, 2025 02:14 AM

உத்திரமேரூர்:-பருத்திக்கொல்லை பகுதியில் உள்ள மானாம்பதி -- புக்கத்துறை நெடுஞ்சாலையோரத்தில், போதை பயணத்தை தடுப்பது குறித்து விழிப்புணர்வு பதாகையை நெடுஞ்சாலை துறையினர் வைத்துள்ளனர்.
உத்திரமேரூர் அடுத்த பருத்திக்கொல்லை பகுதியில் மானாம்பதி -- புக்கத்துறை நெடுஞ்சாலை உள்ளது.
இந்த சாலையை பயன்படுத்தி சுற்றுவட்டார கிராமத்தினர் வாகனங்கள் மூலமாக, செங்கல்பட்டு, சென்னை, புக்கத்துறை ஆகிய பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.
அதேபோல, ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம், மாங்கால் ஆகிய பகுதிகளில் இயங்கும், தொழிற்சாலைகளின் பேருந்துகளும் செல்கின்றன.
இச்சாலையில் அதிகமான வாகனங்கள் செல்வதால், அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. அதில், அதிகமான விபத்துகள் போதையில் வாகனம் ஓட்டுபவர்களால் ஏற்படுகிறது.
இதை தடுக்கும் விதமாக நெடுஞ்சாலையோரங்களில் விழிப்புணர்வு பதாகைகள் அமைக்க முடிவு செய்தனர்.
அதன்படி, உத்திரமேரூர் அடுத்த, பருத்திக் கொல்லை பகுதியில் செல்லும் நெடுஞ்சாலையோரத்தில், போதை பயணத்தை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு பதாகை வைத்துள்ளனர்.
இது குறித்து உத்திரமேரூர் நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சமீப நாட்களாக நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துகளில், பெரும்பாலும் போதை பயணத்தால் நடக்கிறது.
'இதை தடுக்கும் விதமாக நெடுஞ்சாலையோரங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது' என்றார்.