/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ அங்கம்பாக்கத்தில் ரூ.2.40 கோடியில் சாலை சீரமைப்பு பணி தீவிரம் அங்கம்பாக்கத்தில் ரூ.2.40 கோடியில் சாலை சீரமைப்பு பணி தீவிரம்
அங்கம்பாக்கத்தில் ரூ.2.40 கோடியில் சாலை சீரமைப்பு பணி தீவிரம்
அங்கம்பாக்கத்தில் ரூ.2.40 கோடியில் சாலை சீரமைப்பு பணி தீவிரம்
அங்கம்பாக்கத்தில் ரூ.2.40 கோடியில் சாலை சீரமைப்பு பணி தீவிரம்
ADDED : மார் 23, 2025 12:12 AM

வாலாஜாபாத், வாலாஜாபாத் அடுத்து அங்கம்பாக்கம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் இருந்து, கண்ணடியன்குடிசை வரையிலான 2 கி.மீ., துாரம் கொண்ட ஒரு வழிச்சாலை உள்ளது.
குறுகியதான இச்சாலையில் எதிரே வரும் வாகனங்கள், ஒன்றையொன்று கடப்பதில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், இச்சாலை ஆங்காங்கே பழுதடைந்து காணப்படுகிறது.
எனவே, இச்சாலையை அகலப்படுத்தி, சீரமைத்து தர அப்பகுதியினர் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர்.
அதன்படி, அங்கம்பாக்கம் சாலையை அகலப்படுத்தி சீரமைக்க ஒருங்கிணைந்த கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, சில தினங்களுக்கு முன் சாலை சீரமைப்பு பணி துவங்கப்பட்டது.
சீரமைப்பு பணியின் முதற்கட்டமாக அச்சாலையில் மூன்று இடங்களில் சிறுபாலம் அமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெறுகிறது.