/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சாலையில் திரியும் மாடுகளால் குண்ணவாக்கத்தில் விபத்து அபாயம் சாலையில் திரியும் மாடுகளால் குண்ணவாக்கத்தில் விபத்து அபாயம்
சாலையில் திரியும் மாடுகளால் குண்ணவாக்கத்தில் விபத்து அபாயம்
சாலையில் திரியும் மாடுகளால் குண்ணவாக்கத்தில் விபத்து அபாயம்
சாலையில் திரியும் மாடுகளால் குண்ணவாக்கத்தில் விபத்து அபாயம்
ADDED : செப் 19, 2025 02:19 AM

காஞ்சிபுரம்,:குண்ணவாக்கம் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
வாலாஜாபாத் - வண்டலுார் இடையே, நான்குவழிச் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இதில், வாரணவாசி, குண்ணவாக்கம், சின்ன மதுரப்பாக்கம் ஆகிய பகுதிகளில், சாலை நடுவே மாடுகள் சுற்றி திரிகின்றன. மேலும், இரவு நேரங்களில் சாலை நடுவே படுத்து ஓய்வு எடுக்கின்றன. வேகமாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை மீறி மாடுகள் மீது மோதி விபத்துகள் ஏற்படுகின்றன.
எனவே, வாலாஜாபாத் - வண்டலுார் சாலையோரம் சுற்றித்திரியும், மாடுகளை பிடித்து, தொழுவத்தில் கட்ட வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.