/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வடிகால் சிலாப் சேதம் சீரமைக்க கோரிக்கை வடிகால் சிலாப் சேதம் சீரமைக்க கோரிக்கை
வடிகால் சிலாப் சேதம் சீரமைக்க கோரிக்கை
வடிகால் சிலாப் சேதம் சீரமைக்க கோரிக்கை
வடிகால் சிலாப் சேதம் சீரமைக்க கோரிக்கை
ADDED : செப் 03, 2025 02:16 AM

ஸ்ரீபெரும்புதுார்:பண்ருட்டி ஊராட்சி, கண்டிகை அரசு பள்ளிக்கு செல்லும் சாலையோரம் உள்ள வடிகால் மீது, சேதமடைந்துள்ள கான்கிரீட் சிலாபை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், பண்ருட்டி ஊராட்சிக்குட்பட்ட கண்டிகையில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில், அப்பகுதியைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், பள்ளிக்கு செல்லும் சாலையின் இருபுறமும், மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில் வடிகால் வசதி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான லாரிகளை நிறுத்தி வைக்க, வடிகாலை கடந்து செல்லும் கனரக லாரிகளால், வடிகால் மீது அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் சிலாப் சேதமைடந்து உடைந்து உள்ளது.
எனவே, சேதமடைந்த வடிகால் கான்கிரீட் சிலாப்பை சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.