/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க கோரிக்கை உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க கோரிக்கை
உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க கோரிக்கை
உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க கோரிக்கை
உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க கோரிக்கை
ADDED : செப் 21, 2025 12:48 AM

உத்திரமேரூர்:அனுமந்தண்டலத்தில் பூமிக்கடியில் புதைக்கப்பட்ட குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறி வருவதை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் ஒன்றியம் அனுமந்தண்டலம் கிராமத்தில், செய்யாற்று படுகை உள்ளது. இந்த படுகையில் ஆழ்துளை கிணறு அமைத்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு, குழாய் மூலமாக குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு குடிநீர் கொண்டு செல்லும் குழாய்கள், அனுமந்தண்டலம் பகுதியில் செல்லும் களியாம்பூண்டி சாலையோரத்தில் பூமிக்கடியில் புதைக்கப்பட்டுள்ளன.
அப்படி புதைக்கப்பட்டுள்ள குழாய் ஒன்று, அனுமந்தண்டலம் பகுதியில் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இரண்டு மாதமாக உடைந்த குழாய் சரி செய்யப்படாமல் உள்ளது.
மேலும், குழாயிலிருந்து வெளியேறும் குடிநீரானது சாலையோரத்தில் குளம் போல தேங்கி வருகிறது.
எனவே, அனுமந்தண்டலம் பகுதியில் உடைந்த குழாயை சரி செய்ய, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.