/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வாலாஜாபாத் பாலாற்று தரைபாலத்தில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த கோரிக்கை வாலாஜாபாத் பாலாற்று தரைபாலத்தில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த கோரிக்கை
வாலாஜாபாத் பாலாற்று தரைபாலத்தில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த கோரிக்கை
வாலாஜாபாத் பாலாற்று தரைபாலத்தில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த கோரிக்கை
வாலாஜாபாத் பாலாற்று தரைபாலத்தில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த கோரிக்கை
ADDED : மார் 23, 2025 12:10 AM

வாலாஜாபாத்,
காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில், வாலாஜாபாத் ரவுண்டனா அருகே துவங்கி, பாலாற்றின் குறுக்கே அவளூர் சென்றடையும் தரைபாலம் உள்ளது. அவளூர், கண்ணடியன்குடிசை, தம்மனுார், கம்பராஜபுரம், காவாந்தண்டலம், இளையனார்வேலுார், ஆசூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தோர், இந்த பாலாற்று தரைபாலம் வழியாக, வாலாஜாபாத் சென்று, அங்கிருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த தரைபாலத்தில், அவளூர் அருகாமையிலான சாலையில் ஏற்கனவே மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. எனினும், பராமரிப்பின்மை காரணமாக அவை பழுதடைந்து ஒளிராமல் உள்ளது.
வாலாஜாபாத் பாலாற்று தரைபாலத்தின் பாதி துாரம் வரையிலான சாலையில் இதுவரை மின்விளக்கு வசதி ஏற்படுத்தாமல் உள்ளது. மேலும், இந்த தரைபாலத்தின் இருபுறமும் போதுமான தடுப்புகள் ஏற்படுத்தாமல் இடைவெளிவிட்ட கான்கிரீட் துாண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மின்விளக்கு வசதி இல்லாத இத்தரைபாலத்தில் போதுமான தடுப்புகளும் இல்லாததால், இரவு நேரத்தில் விபத்து அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.
எனவே, வாலாஜாபாத் - அவளூர் பாலாற்று தரைபாலத்தில் மின்விளக்கு வசதியோடு, போதுமான தடுப்புகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.